Saturday, August 9, 2014

Haiku 52 : Beautiful lessons,worth refreshing !

கற்க , கற்க சலிக்காத பாடம் !
அழகிய airhostess   கற்று தரும் விமான பாதுகாப்பு..😉

Haiku 51 : Misaligned Horoscope Chart !

கட்டங்கள் சரியில்லாததால் ,கஷ்டம்  வந்ததாம்  : ஜோசியர்  !
கட்டம்  போட்டவனிடம் அழுவதா ,இல்லை
கஷ்டம் போக்க  வழி தேடுவதா?

Sunday, March 30, 2014

Haiku 50 : Love Memories..Age no Bar !

திருமண விழா ஒன்றில் பல வருடங்களுக்கு பின் அவளை
 பேரனுடன் கண்டேன் ..

என் Pacemakerஇல் சில நொடிகள் அழுத்தம் அதிகரித்தது !

இது தான் காதல் என்பதா ?

Saturday, March 1, 2014

Haiku 49 : Dream Demolition !

அறுபது நெருங்க ,
சொத்தை விற்று சொந்த வீடு கட்டி சாதனை !

அறுபதே நாளில்,
பாலம் கட்ட இடம் கோரி வந்தது அரசிடமிருந்து சோதனை !

Haiku 48 : Endless search..

கல்வி,களிப்பு,காதல்,காசு,
காமம்,கடமை.....காவி

வாழ்வில் தீராத ஒன்று...
 ஏதோ ஒன்றை நோக்கி  - "தேடல்" !

Haik 47 : Fear of Flying a.k.a Pteromerhanophobia

ஊரை அடக்கி நாட்டாமை செய்த தாத்தாவுக்கு நடுக்கம்..

அடுத்த வாரம் பேத்தியை காண வெளி நாட்டுக்கு விமான பயணமாம் !

Haiku 46 : Money over might !

பலவானையும் படிய வைக்கும் ,பணபலம் ..

சில்லறை காசுக்கு சலாம் போடும் கோயில்
யானை  !

Saturday, February 22, 2014

Haiku 45 :Dont grab land,have to RIP !


இடம் வாங்கி விற்றவர் இறுதி  சடங்கில் தகறாரு ...

புதைக்க இருந்த இடத்தில் இன்னொருவர் புதைக்க பட்டு  இருந்ததால் !

Haiku 44 : Patience is not a virtue !

கடும் பொறுமைசாலியும் நிலைகுலைந்தார் ..

கண்ணில் தென்படாத கழிவறை !!

Haiku 43:Heavy-headed Bikies !

தலையில் பாரம் இருப்பதால்  தலை காக்கும்  பாரம்  தவிர்த்தனரோ ?

பைக் கண்ணாடியில் மாட்டப்பட்டு உலா போகும் 'ஹெல்மெட்  !

Haiku 42 : Beauties Envy,Animal's pride !


'மேக்-அப் ' இல்லாமல் முகம் காட்டும் விலங்குகள்..

அழகு பெண்களின் வயிற்றெரிச்சல் !

Thursday, January 2, 2014

Haiku 41 : Birthday every year...

சாலை பயணத்தில் வேக தடை போல் வாழ்க்கை  பயணத்துக்கு கால தடை இல்லையே ...

பிறந்த நாள் அன்று Calendar பார்க்கையில்  ஏற்படும் ஆதங்கம் !