Sunday, November 27, 2011

Short Kavidhai 3 : Happy days !


மறந்தது -
அம்மா நேற்று கேட்ட மளிகை சாமான்
மறக்காதது -
காதலியின் ஒண்ணு விட்ட அண்ணன் குழந்தையின் பிறந்த நாள்
பார்ப்பது -
மணிக்கு ஒரு முறை facebook update
பார்க்காதது -
பரீட்ச்ஷைக்கு முன் நாள் வரை புத்தக பாடம்
மாறுவது -
வாரம் ஒரு முறை மொபைல் ringtone
மாறாதது -
கடன் வாங்கி புகைக்கும் Marlboro சிகரட்
அறிந்தது -
கிசு கிசு நடிகையின் மூன்றாம் கணவன் சரித்திரம்
அறியாதது -
தெருவோரம் கடையில் விற்கும் காய்கறி விலை
பிடித்தது -
கை ஏந்தி பவனில் பரோட்டா சால்னா
பிடிக்காதது ௦-
அப்பா கேட்கும் semester மார்க்சீட்
கேட்பது -
பிறந்த நாள் வசூலுக்காக தாத்தாவிடம் ஆசீர்வாதம்
கேட்காதது -
'நீ உறுப்பட மாட்ட டா ' வென்று வாழ்த்தும் பலரின் advice !

Sunday, November 20, 2011

Haiku 35 : I will wait , Son !


அம்மா .....

அன்று -
பள்ளி முடித்து பிள்ளையை அழைத்து வர
கத்திரி வெயிலில் ஸ்கூல் கேட்டில் காத்திருந்தாள் ...

இன்று -
வேலை முடித்து வெளிநாட்டு மகன் திரும்பி வர
மரக்கடிக்கும் குளிரில் ஐஸ் பெட்டியில் காத்திருந்தாள்...!!

Haiku 34 :Pen - No emotions @ work !


இறப்பு மடல் எழுதி முடித்த அடுத்த நொடி
பிறப்பு மடல் எழுதும் வேலைக்கு சென்றது
- போஸ்ட் ஆபீசில் கைமாறிய பேனா !

Haiku 33 : Filter Coffee


நறுமணம் வீசும் கறுப்பு ராணி
தூக்கம் கலைக்கும் அழகு தோழி
- படுக்கையில் என் அருகே filter coffee !

Sunday, October 23, 2011

Haiku 32 : Loss of pay to pay for heath !


அலுவலக பணிக்காக ஓயாமல் உழைத்து குன்றி போனது உடல் ...
Loss of pay leave எடுக்க சொல்லி உத்தரவு தந்தது அலுவலக மடல் !

Sunday, August 21, 2011

Haiku 31:Getting my head around Weather lessons!


தலையில் குட்டி ,வானிலை கற்று தந்த பள்ளி வாத்தியின் பாடம் மண்டைக்கு எட்டியது ............
வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் என் மொட்டை தலை !!

Sunday, May 8, 2011

Haiku 30: Mission Slimdown !


' ஆக்கல் கடினம் , அழித்தல் எளிது '..
உலக பொது நிதியை ஏற்க மறுத்தது- தொப்பை !

Tuesday, April 26, 2011

Haiku 29 :Jasmine touch


மனைவிக்கு மல்லிகை பூ..
ஆசையினால் அல்ல..
அம்மா செய்த இட்லி மல்லி சட்னியின் மென்மையை உணர்த்த !

Thursday, April 7, 2011

Haiku 28 :Focus !


இரண்டு நாளில் பரிட்ஷை முடிவு...
சுடிதார் தேடிய கண்கள் , சிவன் கோவில் சூடம் தேடியது ...

Haiku 27:Sweet Sweat

வியர்வை சிந்தி பிழியப்பட்ட தித்திக்கும் கரும்பு சாறு..
சுவைத்து குளிர்ந்தவர் சில்லறையில் வீட்டில் சோறு !

Haiku 26:Pride @ any cost !


கசங்கினாலும்... கிழிந்தாலும் ...
கர்வத்துடன் காக்கப்படும் குறுகிய காகித துண்டு ....

Haiku 25 :A for Apple,I for i-Pad

அக்ஷரம் கற்று தர 'பலகை- பல்பதுடன்' தயார் ஆனார் ஆசிரியர்...
அ,ஆ,இ,ஈ...டவுன்லோட் செய்து iPad -ஐ காட்டியது சுட்டி குழந்தை !
Photo courtesy :http://www.flickr.com/photos/8168931@N04

Haiku 24 :Hot Stick

அனல் பறக்கும் வெய்யிலில் கூட ,
ஆனந்தம் தரும் அக்னி !

Sunday, March 27, 2011

Haiku 23: Divine Light


நாத்திகம் பேசியவர் நெற்றியில் பளிச்சிட்ட திருநீர்....
கோயில் திருவிழா 'சீரியல் லைட்' கான்ட்ராக்ட் கிடைத்துள்ளதாம் !!

Wednesday, March 23, 2011

Haiku 22:Every Second Counts

ஓர் இரு நிமிடங்கள் விட்டு சென்ற விழுப்புண் பாடங்கள் ....
நொடி பொழுது கூட தாமதிக்காமல் ஓடி கொண்டிருக்கும் ஜப்பான் ரயில்கள் !!

Saturday, March 19, 2011

Haiku 21:When you open your mouth

மீன் கூட பிழைத்திருக்கும் - தக்க தருணத்தில் வாய் மூட கற்று இருந்தால் !

Wednesday, February 16, 2011

Haiku 20: Life (CUT) Tree


மரம் வெட்டி கடத்தல் செய்தவரின் இறுதி சடங்கில் தாமதம் -
ஊரெங்கும் தேடியும் 'விறகு' கிடைக்காதால் ....