Thursday, October 15, 2020

Haiku 60: To tell or not to tell


வயது, வைத்தியம்,  வெற்றி மந்திரம் -
பிறரிடம் மறைத்து வைப்பதே சுவை,
அதிகம் திறந்து பேசினால் சுமை.

Saturday, June 13, 2020

Haiku 59: Hurrying towards the next worry

வாழ்க்கை-
ஒன்று முடிய, அடுத்த கவலையை
நோக்கி ஓடும் தொடர் ஓட்டம் ..

Saturday, January 18, 2020

Haiku 58: Context is everything

இடம், பொருள், ஏவல் அறிந்து
நினைப்பதை - சொல்
நினைப்பதை - சொல்ல மறு
நினைப்பதை - சொல்ல மற
நினைப்பதை - குறைத்து சொல்
நினைப்பதை - மாற்றி சொல்
நினைப்பதை -  சொல்லாமல் சொல்

Haiku 57: Salvation or Crime?

முக்தி அளித்ததற்கு நன்றி சொல்வதா,
கொலை செய்ததற்கு சபிப்பதா
- வலையில்  மீன்.