Sunday, December 29, 2013

Haiku 40 : Similar view but different rules !

தங்கை அறை ஜன்னல் மூடி, 
எதிர் வீட்டு பையன் நோட்டம் தவிர்த்து...
தன் அறை ஜன்னல் திறந்து, 
எதிர் வீட்டு  பெண் மேல் கண்ணோட்டம்     தொடர்ந்தான் அண்ணன் !

Wednesday, December 25, 2013

Haiku 39 :Life @ Casino !

அயராமல் உழைத்தும் ஓயாத கடன் -

உபயம் : அன்றொரு நாள் ஆயிரம் ரூபாய் பரிசு தந்த பத்து ரூபாய் சூது !

Sunday, December 1, 2013

Haiku 38: Shark Shake-Up

சுறாமீன் என்று எண்ணி, அரைகுறை நீச்சல் தெரிந்தவன்
சுழன்றெடுத்து கரை சேர்ந்தான்.

- சுறாக்களின்  துணையின்றி திறமைகள் வெளிவருமோ?

Short Kavidhai 4: Facebook

பழகாத முகங்களோடு புரியாத நட்பு

நொடிக்கு-நொடி நடப்பதை  பகிர்ந்துகொள்ள துடிப்பு

 ஒழிந்திருந்து அடுத்தவன் வாழ்க்கையை ரசிப்பதில் ஈர்ப்பு

செயற்கை வாழ்வில் குதூகளிக்க  நல்ல வாய்ப்பு

இக்கணி  போதைக்கு நாம் அடிமையாவதில் என்ன வியப்பு ?

Sunday, March 10, 2013

Haiku 37 : Painful Reward


சரியாக உழைத்தால் அடி..
'பட'வென்று snooze ஆகும்  alarm  clock !

Monday, January 7, 2013

Haiku 36 : Unbreakable Bond !

விரிசல் விட்ட மண வாழ்க்கையில்,
ஒட்டி கொண்டிருக்கும் ஒரே பந்தம்..
    - வீட்டு சுவற்றில் மண  நாள் புகைப்படம் !