Sunday, November 27, 2011

Short Kavidhai 3 : Happy days !


மறந்தது -
அம்மா நேற்று கேட்ட மளிகை சாமான்
மறக்காதது -
காதலியின் ஒண்ணு விட்ட அண்ணன் குழந்தையின் பிறந்த நாள்
பார்ப்பது -
மணிக்கு ஒரு முறை facebook update
பார்க்காதது -
பரீட்ச்ஷைக்கு முன் நாள் வரை புத்தக பாடம்
மாறுவது -
வாரம் ஒரு முறை மொபைல் ringtone
மாறாதது -
கடன் வாங்கி புகைக்கும் Marlboro சிகரட்
அறிந்தது -
கிசு கிசு நடிகையின் மூன்றாம் கணவன் சரித்திரம்
அறியாதது -
தெருவோரம் கடையில் விற்கும் காய்கறி விலை
பிடித்தது -
கை ஏந்தி பவனில் பரோட்டா சால்னா
பிடிக்காதது ௦-
அப்பா கேட்கும் semester மார்க்சீட்
கேட்பது -
பிறந்த நாள் வசூலுக்காக தாத்தாவிடம் ஆசீர்வாதம்
கேட்காதது -
'நீ உறுப்பட மாட்ட டா ' வென்று வாழ்த்தும் பலரின் advice !

Sunday, November 20, 2011

Haiku 35 : I will wait , Son !


அம்மா .....

அன்று -
பள்ளி முடித்து பிள்ளையை அழைத்து வர
கத்திரி வெயிலில் ஸ்கூல் கேட்டில் காத்திருந்தாள் ...

இன்று -
வேலை முடித்து வெளிநாட்டு மகன் திரும்பி வர
மரக்கடிக்கும் குளிரில் ஐஸ் பெட்டியில் காத்திருந்தாள்...!!

Haiku 34 :Pen - No emotions @ work !


இறப்பு மடல் எழுதி முடித்த அடுத்த நொடி
பிறப்பு மடல் எழுதும் வேலைக்கு சென்றது
- போஸ்ட் ஆபீசில் கைமாறிய பேனா !

Haiku 33 : Filter Coffee


நறுமணம் வீசும் கறுப்பு ராணி
தூக்கம் கலைக்கும் அழகு தோழி
- படுக்கையில் என் அருகே filter coffee !