Monday, November 29, 2010

Short Kavidhai 2 : Me too in 'templated' life !


திறமை இருந்தது
இலட்சியம் பிறந்தது
வேலை கிடைத்தது
வசதி விரிந்தது
EMI நுழைந்தது
காலம் பறந்தது
கனவு ஓயுந்தது
வாழ்கை முடிந்தது !

Short Kavidhai 1: Cricket , It'ssssss hot !!!!


பச்சை மெத்தை..
நடுவில் வித்தை...
மொத்தம் இரு பாகம்
இடையில் உருண்டோடும் தேகம்,
ஒருவர் இலக்கை ஒருவர் மீற
சில மணி நேரம் கார சாரம் !

Haiku 19 : Dad, I am here !


தொலைவில் நான்....
தொடையில் அவன்....
லேப்டாப் screen saver இல் ஏக்கத்துடன் குழந்தையின் முகம் !

Sunday, October 3, 2010

Haiku 18 :No thorny quality : Softness !


மென்மையை உணர்த்த இறைவனின் அழகு படைப்பு - முள் !

Sunday, May 30, 2010

Haiku 17 : My friend, isn't it fishy ?


அழகிற்காக ஆசையாய் வளர்த்தாய்
ஆத்திரம் வந்ததும் அடித்து உடைத்தாய் -
உடைந்த தொட்டியில் துடித்தது வண்ண மீன் !

Haiku 16 : Desires !


ஆசைக்கு ஓய்வு , ஓசை நின்றதால்....
உடலை உரமாக்க ஆசையுடன் காத்திருந்தது மண் !

Sunday, April 4, 2010

Haiku 15 :Compilation error :Saree Bug !

அவன் அடித்த 'ஜாவா கோடும்'  செய்யமறுத்தது  வேலை, என்றும் சுடிதாரில் வருபவள், இன்று  கட்டி இருந்தாள் சேலை !!

Saturday, March 27, 2010

Haiku 14 : Nature's Fury !


அன்று ,
கடல் அலையாய் வந்து பிஞ்சு விரல்கள் கட்டிய மணல் வீட்டை உடைத்தாய் - ஆனந்தம்

இன்று,
பூகம்பபாய் வந்து வியர்வை சிந்தி உருவாக்கிய
என் வாழ்விடத்தை பறித்தாய் - ஆத்திரம்

Sunday, January 17, 2010

Haiku 13: Scent of White !


கறு கறு அருவியில்
மணம் வீசும் வெண் சுடர் .....
- அவள் கூந்தலில் மல்லிகை பூ !

Sunday, January 10, 2010

Haiku 12 : Pedalling for Survival !


மிதிபட்டால் தான் முன்னேற்றம்-
தொழிலாளியை அழைத்து சென்றது சைக்கிள் !

Photo courtesy :flickr.com/photos/75918739@N00/313030760/

Friday, January 1, 2010

Haiku 11: "To Spit Anywhere" - My Birth Right !


"அனைத்து கட்சியினரின் உரிமை மீறல் போராட்டம் -
பொது இடத்தில எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் -
கட்சி உயர் அதிகாரிகள் கைதானதால் !!!"

Haiku-10:Just for listening : Style or Self-realization ?


"லோகத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ வேண்டும்;
லோகா சமஸ்தா சுக்ஹினோ பவந்து "
- மார்கழி மாத காலட்சேபம் சபாவில் முடிந்தது ;
அடுத்த ஐந்து நிமிடத்தில் சபா காண்டீனில் பொங்கல் வாங்க பக்த கோடிகள் சண்டை !