Saturday, September 23, 2023

Haiku 64- Sustainable growth

அன்று..
கடை தெருவுக்கு மஞ்ச துணி பை எடுத்து செல்ல கௌரவம் பார்த்தவன்,
இன்று ..
மஞ்ச பை மண்டி  வைத்து கௌரவமாய் வாழ்கிறான்.

- 5 ரூபாய் பை,
  $5 க்கு Amazon இல் சக்கபோடு விற்பனையாம்!

Saturday, September 9, 2023

Haiku 64 : Absent value

 

மின்சார தடை -
ஓட  மறுத்த மின் விசிறி:

'எதுவும், இல்லாத போது தான் அருமை தெரியும்' -

சுவற்றில் படமாய் இருந்த அப்பாவின் குரல்?

Haiku 63: Life Expiry


 Expiry தேதி தெரிந்தும் வஸ்துவை வீணாக்கும் மனிதன்,
Expiry தேதி தெரியாமலிருக்க வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன ஆச்சர்யம்?

- உலக Expired food மாநாட்டில், ஆதங்கம்.

Saturday, July 15, 2023

Haiku 62: Power of listening

 பார்த்தேன்..... ரசித்தேன்,

கேட்டேன்.... உணர்ந்தேன்

Saturday, September 18, 2021

Haiku 61: Fear of public speaking

    முன்னின்று, படைகளை எதிர்த்தவனுக்கு, இன்று பயங்கர நடுக்கம்..
பெரிய அவை ஒன்றில்   மேடையில் பேச அழைத்ததால்!



Thursday, October 15, 2020

Haiku 60: To tell or not to tell


வயது, வைத்தியம்,  வெற்றி மந்திரம் -
பிறரிடம் மறைத்து வைப்பதே சுவை,
அதிகம் திறந்து பேசினால் சுமை.

Saturday, June 13, 2020

Haiku 59: Hurrying towards the next worry

வாழ்க்கை-
ஒன்று முடிய, அடுத்த கவலையை
நோக்கி ஓடும் தொடர் ஓட்டம் ..